Monday, December 20, 2010

பூக்களை உண்ணும் வண்டுகள்..

பூக்களில்...
தேனை உறிஞ்சும்
வண்டுகள்..
பூக்களை சேர்த்து
உறிஞ்சுமா?.... என்ன...
பின்பு ஏன்!.....
உன்
பார்வை மட்டும்
என்
காதலோடு
என்னையும் சேர்த்து
உறிஞ்சிக்கொள்கிறது......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்




Monday, December 6, 2010

கண் மை

பெண்ணே!....
நீ...
கண் மை
இடும் பொழுதுதான்
கறுமையும்
கொஞ்சம்
கர்வம் கொள்கிறது..........

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, December 5, 2010

பூமி காதல்

உன் மேல் விழுந்து
உதிரும்
மழை துளி
பூமியில் பட்டதும்
பூமி கொஞ்சம்
கரைந்து தான்
போகிறது காதலில்...
என்னை போல!.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, October 20, 2010

உன்னுள் நான்

உன்னை பேருந்தில்
தொடர்ந்த நாட்கள் தான்
எத்தனை?..
நீ என்னை அவ்வப்போது
கண்களால் கவர்ந்து
இழுத்தாலும்....
உன்னுள் நான்
இருக்கிறேனா என்ற சலனம்
என் மனதிற்குள்...
எல்லோரும் அமர்ந்த பேருந்தில்
உன் அருகில் ஒரே ஒரு இடம்
நான் மட்டும் நின்று கொண்டிருக்க
சற்று தள்ளி அமர்ந்து....... அப்போது
நீ என்னை பார்த்த பார்வையில் தான்
உன்னுள் நானிருக்கிறேன்
என்பது தெரிந்தது......

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, September 20, 2010

சாலையோர மரங்கள்

பெண்ணே!....
நீ!....
நடந்து செல்லும்
வழியில் உள்ள

சாலையோர
சருகு மரங்களை
பார்க்கும் பொழுது.........
நீ!....
ஒரு நாள்
பச்சை வண்ண தாவணி
அணிந்து வந்ததை
பார்த்த
வெட்கத்தில் என்று
மட்டும் தெரிகிறது.....
.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, September 19, 2010

காத்திருக்கும் நேரம்

சகியே.....
உனக்காக நான்
காத்திருக்கும்
நேரம் கூட
நேர்த்திக்கடன்தானடி.......

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Friday, September 3, 2010

நினைத்தவை

இன்றைய இளைஞர்கள்

சிகரத்தை தொட
நினைக்கும்
இளைஞர்கள் கையில்
சிகரெட்............


கனவு

கனவு
காண்பது
தவறல்ல
கனவிலே
வாழ்வது தான்
தவறு..............

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, September 2, 2010

அரசு துவக்கப்பள்ளி

மாணவர்களே இல்லாத
வகுப்பறையும்
ஒவ்வொரு வருடமும்
தேர்ச்சி பெற்று
முன்னேறுகிறது
தேர்வு எழுதாமல்.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, September 1, 2010

பிடிவாதம் பிடித்த வதமடி

தேவதையே!....
நான்
உன்னை
பின் தொடர்ந்த
நாட்கள் தான்
எத்தனை எத்தனை....
என்
காதலை பார்த்த
உன் நிழல் கூட
என் நிழலை
காதலிக்க கற்றுக்கொண்டது!...........
நீ என்னை
கடக்கும் நேரம் அவைகள்
முட்டி மோதி
கொஞ்சிக் கொள்கின்றன......
உன் நிழல்
என் நிழலிடம்
கூறியதாம் இருந்தாலும்
என்னவளுக்கு இத்தனை
பிடிவாதம் கூடாதென்று...............
உன் நிழலுக்கு
தெரியவில்லை இந்த
பிடிவாதம் தான்
இத்தனை நாள்
என் தேவதை தரிசனத்தோடு
உன்னை பின்தொடர்ந்து
காதலிக்க
வைத்தது என்று...........
இந்த பிடிவாதம்
என் இதயத்துக்கு
பிடித்த வதமடி.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, August 31, 2010

விழியில் விழுந்தேன்

என்
வழியில் கண்டேன்
உன்
விழியில் விழுந்தேன்
என்
வழி மறந்தேன்
உன்
வழி தொடர்ந்தேன்
என்
நிலை மறந்தேன்
உன்
வழி அறிந்தேன்
என்
இதயம் மாய்த்தேன்........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, August 30, 2010

இதயம் இரட்டிப்பானது

மானசீகமானவளே!..........
சில நேரம்
வேண்டும் என்றே
என்னை
அருகில் பார்க்க
உன் தோழிகளோடு
என்னை கடந்து செல்கிறாய்........
என்னருகில்
நீ வரும் ஒவ்வொரு
நிமிடமும்
என் சுவாசம் வழி
இதயம் இறங்கி
என் இதயத் துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பாகிறது..................
இரட்டிப்பின் அர்த்தம்
இப்போது தான்
புரிகிறது
எனை பார்க்கும் தருணம்
நீ சுவாசிக்க மறந்து................
என்னுள் நீ
இரண்டறக் கலந்து
உனக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதால்
இதய துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பானது...................

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, August 29, 2010

கண்களும் சுவாசிக்கிறது.........

பெண்ணே!.....
நான்
உனை பார்க்கும் நிமிடம்
என் கண்களும்
சுவாசிக்கிறது.........
அதே நேரம்
நீ எனை
பார்க்கும் தருணம்
சுவாசம்
இறங்கி
இதயம் வழி
நேசம் வீசும்.............
அப்பொழுது நம்
இருவர்
புன்னகை தானே
காதல் மொழி பேசும்...........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Friday, August 27, 2010

செத்துப் பிளைக்கிறேனடி

காதலியே!........
நீ
உன் தோழிகளோடு
பேசும்பொழுது
என்னை
ஓர விழிகளால்
பார்த்து
ஒவ்வொரு முறை
சிந்தும்
சிரிப்பினில்
நான்
செத்துப் பிளைக்கிறேனடி.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, August 26, 2010

வெட்கத்திற்கு கொஞ்சம் வெட்கம்

சகியே!.........
நீ
என்னை பார்த்து
வெட்கப்படும்
ஒவ்வொரு தருணமும்
வெட்கமும்
கொஞ்சம்
வெட்கப்பட்டுதான் போகிறது......
இவ்வளவு அழகாக
வெட்கப்பட முடியுமா
என்று?.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கண்ணாடிகளுக்கு கர்வம் தான்

பெண்ணே!...
உன்
வீட்டு
கண்ணாடிகளும்
கவிதை
எழுதுகின்றன...........
நீ
ஒவ்வொரு முறை
முகம்
பார்க்கும்
தருணத்திலும்..........
உன்
வீட்டு
கண்ணாடிகளுக்கு
கொஞ்சம் கர்வம் தான்
உன்னை
பிம்பமாக
எதி
ரொளிப்பதினால் .........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, August 25, 2010

நினைவுகள்

உன்
நிழல்கூட
சில நேரங்களில்
உன்னை பின்
தொடர
மறந்தன.............
ஆனால்
என்
நினைவுகள்
என்றுமே
உன்னையே
பின் தொடர்கின்றன.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, August 24, 2010

உயிர் துளி

உன் காதலனோ
காதலியோ
மழை துளியில்
உடல் நனைக்கும் நிமிடம்
உன் இதயம் நனைக்கும்............
மழை துளிகள்
ஒவ்வொன்றும்
உருவம் பெற்று
உயிர் துளி ஆகும்...........

மழை மட்டுமே
காதலர்களின்
அழகை இன்னும்
அழகு படுத்துகிறது............

மழையில் நனையும்
தருணம்
மழலை பருவம் அடைவாய்........

மழை
மேகம் வடிக்கும்
கண்ணீர் துளியாய்
இருந்தாலும்...................
உன் கண்ணீரை
மறைத்துவிடும்.............

எத்தனை வருட
சோகத்தையும்
நீ
மழையில்
கரைத்து விடலாம்...........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, August 23, 2010

இதழ்கள்

சகியே!....
உன்
இதழ்கள் குவியும்
நேரம்
என்
இதயம்
இரட்டித்துதான்
போகின்றன........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

நினைத்தவை

பெண்ணே!...
உன் புன்
(நகை)க்கு
ஈடு இல்லை...

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

ஏன் பெண்ணே!......

கனவுகளுக்கு
கலர் இல்லை..
நீ
வரும்
கனவுகள் மட்டும்
வண்ண கனவுகளாக
வந்து போவது
ஏன் பெண்ணே!......

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, August 19, 2010

ஹைக்கூ

வான வில்லுக்கு
வர்ண பூச்சு
உன் உதட்டுச்சாயம்.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இதயம் இறகாய் மாறியதே

பெண்ணே!....
நீ
என்னை
பார்க்கும் தருணம்!..........
இரும்பை போல
இருந்த இதயம்
இறகாய் இன்று மாறியதே.....
சிறையை போல
இருந்த மனது
சிறகை விரித்து பறக்கிறதே......
தெரிந்தே விழுந்தேன்
வீழ்ச்சியில் கொஞ்சம்
மகிழ்ச்சியடி.........
என் காதல்
விரதம் கலைந்ததடி........
உன் நினைவு
எனும் விதை
என் மனதில்
விருட்ஷமாய் இன்று
மாறியதே.............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, August 18, 2010

செல்ல கோபம்

பூக்களின் அரசியே!....
நீ
என் வீட்டு
பூ செடிகளின் ஓரம்
தலை துவட்டும்போது
தெறிக்கும்
நீர் திவலைகள்
பூ செடிகளின் மேல்
பட்டவுடன்

சற்றே பறிதவித்துதான்
போகின்றன
!
பூ செடிகள்............
அங்கு வரும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேனு
றுஞ்சிகளும்
பூவின் தேனை
விட்டு விட்டு
உன் தலையில்
உதிர்ந்த
நீர் திவலைகளை
திருடிச் செல்கின்றன!...........
என் வீட்டு பூக்களுக்கு
செல்ல கோபம்தான்
உன் மேல்.................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்




மழை துளி முத்தாக......

கள்ளியே!......
கடலோரம் நீ
நடக்க
கள்ளி
மேனி தொட
நினைத்த கார்மேகம்
கண்ணீராக கரைந்தது.........
மழை துளி
வாங்கிய
சிப்பிகள்
முத்தக மாற்ற
முன்னூறு வருடங்கள்
ஆகுமாம்.....
உன்னை பார்த்து
வாய் திறந்த சிப்பிகள்!.....

உன் மேல் பட்டு தெறித்த
மழை துளிகள்..........
சிப்பிகள் மூடும்
முன்னரே
முத்தாக......

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, August 16, 2010

விழி மொழி

ராட்ஷஷியே!........
உன் விழி மொழி
அறிந்ததேன்!..........
காதல் மொழி
விழுந்தேன்!.............
காதல் மொழி
அறிந்ததேன்............
தாய் மொழி
மறந்தேன்!...............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, August 15, 2010

சூரியனின் ஓவியம் நீ

பெண்ணே!......
உன் அழகை
ஒவ்வொரு நாளும்
வரைந்து ஓவியம்
கற்கவே வருகிறது
சூரியன்........
ஓவியம்
நிழலாக!.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Friday, August 13, 2010

கவிஞனாக தோற்று போகிறேன்

அழகியே!......
உன்
அழகை
வர்ணிக்கும்
வார்த்தைகளில்
கவிஞனாக நான்
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்.........
அடுத்த முறை
பார்க்கும் பொழுது
இன்னும் கொஞ்சம்
அழகு கூடி
இருப்பதினாலோ?.....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, August 12, 2010

கள்ளிக்கும் உன் மேல் காதலோ?

கள்ளியே!........
சிறு பிள்ளையில்
நீயும் நானும்
நாம் பெயரை
கள்ளியில்
எழுதி விளையாண்டோம்
நான் எழுதிய பொழுது
கள்ளி கண்ணீர் வடித்தது
கள்ளி பாலாக....................
நீ
எழுதிய பொழுது
மயங்கி
கண்ணீர் விட மறந்து
புன்னகை பூ பூத்தது
பூக்களாக.........
பல வருடங்கள்
கழித்து பார்த்தேன்....
அதிசயித்துப்போனேன்
நீ
எழுதியதை
அந்த கள்ளி
உலக அதிசயமென
பொக்கிஷமாக
பாதுகாப்பதை எண்ணி....
கள்ளியே கள்ளிக்கும்
உன் மேல்
காதலோ?................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, August 11, 2010

அனாதை

என்
தாய் பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தந்தை
பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தாய் நாட்டை
பிரிந்த போது
நினைக்கிறேன்........
நான் ஒரு
அனாதை என்று.............................


என்
தாய் இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்.........
என்
தந்தை இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்........
என் தாய் நடில்லாதபோது!....
இரு அகதிகளின் குரல்...

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கடைக்கண் பார்வை

அழகியே!....
உன்னை
பார்த்த நாள்
முதலே
மீன் தொட்டிக்குள்
விழுந்த மீனாய்
ஆனேன்.............
சில நேரம்
நீ வீசிச்சென்ற
கடைக்கண் பார்வை
மீன் தொட்டியில்
விழுந்த மீனை
வலை விரித்து
பிடிப்பதின் முயற்சியோ?.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, August 10, 2010

உன் முகப்பரு துளி

அழகியே!.....
பனித்துளிக்கும்
உன் முக பரு துளிக்கும்
பந்தயம்...
யார் அழகென்று
நடுவனாக சூரியன்.....
சூரியனின்
சுடர் பட்டதும்
பனித்துளி பழியானது...
உன் பரு துளிகள்
இன்னும் மெருகேறி
பவளமானது....

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

புன்னகை இதழ்

பெண்ணே!....
இமயத்தை

இரட்டித்த
இடியை கூட
தாங்கிய
என் இதயம்...........
உன்
இதழ்கள்
உதிர்க்கும்
புன்னகையில்
உடைந்து போகிறது.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Friday, August 6, 2010

வெற்றி புள்ளி

நீ
சிந்தும்
வியர்வைத்துளி
என்றுமே
முற்றுப்புள்ளி அல்ல....
அது - என்றுமே
உன்
வெற்றியின்
தொடர் புள்ளிகளாகவே..............

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, August 5, 2010

தற்கொலை முயற்சி

நீ
சூடியிருந்த
நான்
கொடுத்த ரோஜா!...
தலையில்
இருந்த மயக்கத்தில்
ஒவ்வொரு
இதழாக உதிர்ந்தது..........
உன்னை
பின் தொடர்ந்த
எனக்கு
இதயத்தின்
ஒவ்வொரு
அறைகளாக உதிர்ந்தது.........
பிறகு தான் தெரிந்தது
அது ரோஜாவின்
தற்கொலை முயற்சி என்று...
தன்னை விட
அழகானவளை
பார்த்ததினால்............

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, August 4, 2010

கண்களுக்கு முத்தம்

பிரிய சகியே!.......
நான்
உன்னை
பார்க்கும் தருணம்......
நீயும்
என்னை
பார்க்கிறாய்..................
அது
உன் கண்களால்
என் கண்களுக்கு
நீ கொடுக்கும்
முத்தம்....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்


Tuesday, August 3, 2010

சகியே... நீ

சகியே...
நீ
நடந்த
பாதையில்
பாறைகளும்
பனிக்கட்டிகளாக
உருகுகிறது.....
என்னை போல!.....................
நீ
தொட்ட
பனிக்கட்டிகளும்
குளிரில்
நடுங்குகிறது...
என்னை போல!...................

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

வானவில்

பெண்ணே!...
உன்னை

பார்த்ததால் என்னவோ
தன்னை அழகு என்று
நினைத்து முகம்
காட்டிய வானவில்
அவ்வப்போது மறைகிறது.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, August 1, 2010

நானும் ஒரு பைத்தியக்காரனாக.............

காதலியே....
உன்
வருகைக்காக காத்திருந்த
ரயில் நிலையத்தில்.....
என் அருகில்
பைத்தியக்காரன்
எதையோ
முனங்கி கொண்டிருந்தான் .....
நான் உன்னையே
நினைத்து
உன் பெயரை
முனங்கினேன்
நானும் ஒரு
பைத்தியக்காரனாக.............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்


Friday, July 30, 2010

காதல் வசப்பட்டதால்.....

தோழியே!....
தடுமாறி போகிறேன்
உன் மேல் நான்
காதல் வசப்பட்டதால்.....

சிறகுகள் மோதி
சிதைந்ததுண்டா?
சிதைந்து போகிறேன்
நீ ஒவ்வொரு முறை
என் மேல் சாயும்பொழுது......

மயிலிறகு வருடியதால்
மரணித்ததுண்
டா?...........
மரணிக்கிறேன்
என் முகத்தில்
உன் கூந்தல்
வருடும்
ஒவ்வொரு முறையும்.....

மழை சாறல் பட்டு
மயங்கியதுண்டா?..............
மயங்குகிறேன்
நீ மழையில் என்
கை விரல் பிடித்து
நடக்கையில்...............

தென்றல் தீண்டி
தீ மூட்டியதுண்டா?......
தீ மூட்டுகிறது
உன் தாவணி
என் மேல் தீண்டும்பொழுது...
.........


.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கண்ணீர் துளி

Thursday, July 29, 2010


எங்கள் ஊர் பெற்றோர்கள்

மண் வெட்டி வெட்டி
வெந்து போன
உங்களின் கைகளும்
மண்ணில் சிந்திய
வியர்வை துளிகளும்
எங்களின்
நோட்டு புத்தகங்களாக!......

எங்கள் ஆசிரியர்
சொல்லும் போது தெரியவில்லை
உயிர் எழுத்துக்களின் வலிமை....
நீங்கள்
உயிரை கொடுத்து சிந்திய
இரத்தமும் வியர்வையும்
எங்கள் பேனாக்களில்
வழிந்தன உயிர் மை (மெய்) எழுத்துக்களாக...
அப்போதுதான் தெரிந்தது
உயிர் எழுத்துக்கள்
ஒவ்வொன்றிலும் உங்கள்
உயிர் உள்ளதென்று.........

கல்லூரியில் படிக்கும்
நாங்கள்!..
கால் வயிற்றுடன்
இருக்க கூடாதென்று
நீங்கள்
முழு நாளும் பட்டினி கிடப்பது
நாங்கள் செய்த பாவமா?...
இல்லை பாக்கியமா?..... - ஆம்
நாங்கள் செய்த பாக்கியம் தான்
உங்களின் வயிற்றில்
பிள்ளைகளாக பிறந்தது!..............


உங்களிடம்
உள்ளதோ ஒரே ஒரு ஆடை
அதிலும் ஓராயிரம் ஓட்டைகள் - ஆனால்
எங்களின்
ஆடை அழுக்காக உள்ளதென்று
புதிய ஆடை வாங்கித்தரும்
புத்தர்கள் அல்லவா
நீங்கள்!..........

கல்லூரிக்கு போகும்
நாங்கள்
கலங்க கூடாதென்று
எங்களின் பைகளில்
பல புதிய நூறு ரூபாய் நோட்டுகள்
திணித்தவர்கள் நீங்கள் ....
ஆனால் !....
உங்களின்
பைகளில் கிழிந்த
ஒரே ஒரு
ஒரு ருபாய் நோட்டு
ஓராண்டிற்கும் மேலாக...

நாங்கள்
பஞ்சணையில் உறங்க
நீங்கள் உண்ணுவது
பழைய சோறும்
பட்ட மிளகாயுமா?....
இது நாங்கள் வாங்கிய வரமா?...
இல்லை சாபமா?.... - ஆம்
நாங்கள் வாங்கிய வரம் தான்
உங்களின் செல்வங்களாக பிறந்தது......

உங்கள்
கைகளில் இரத்தம்
வழிந்தாலும்.
கல்லூரிக்கு செல்லும்
எங்களின் கால்களில்
கல் குத்திவிடுமே என்று எண்ணி
காலனி வாங்கி தந்த
கடவுள்கள் தானே
நீங்கள் .... - ஆம்
எங்களுக்கு நீங்கள்
கடவுள்தான்.........
உங்களுக்கு தான் பொருந்தும்
இந்த வரிகள்
மாதா , பிதா , குரு , தெய்வம் .

உங்களின்
பிள்ளைகள் கல்வி பயில
உயிரை விடுங்கள்
என்றால்
உங்களுக்கு தான்
எவ்வளவு போட்டி
உங்களின் உயிரை விட...
இது போதாதென்று
காலம் எல்லாம்
உங்கள்
தோள்களில் சுமந்து
எங்களை கடனாளியாக
ஆக்கிவிட்டீர்கள்...
எத்தனை பிறவி எடுத்தாலும்
உங்களின் கடனை அடைக்க
முடியாமல்... நாங்கள்..
எங்களின் கண்ணீரை
உங்களின் பாதங்களில்
காணிக்கை ஆக்குகிறோம்.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இலை உதிர் காலம்

Sunday, July 25, 2010

என் இதயம்......

தோழியே!.....
நீ
ஒவ்வொரு முறை
என் கை
பிடிக்கும் பொழுது
எனக்குள்
காதல் மரம்
தளிர் விடுகிறது....
நீ..........
என் கையை
விடும் தருணம்
தென்றலில்
ஆணி வேறோடு
பிடுங்கப்பட்ட
மரம் போல்
என் இதயம்......
கடைசியாக நீ
வீசிச்சென்ற பார்வையில்
பிடுங்கப்பட்ட
தடயம் கூட
தழும்புகளாக.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Saturday, July 24, 2010

வள்ளுவன்.. உன்னை பார்த்திருந்தால்

பெண்ணே!..
இரு வரிக்குள்
உலகையே அடக்கிய
வள்ளுவன்..
உன்னை பார்த்திருந்தால்
உன்னை வர்ணிக்க..
இருபது கோடி
நுற்றாண்டு காலம்
வாழ்ந்திருந்தாலும்
முடித்து இருக்க மாட்டான்
இரு வரி கவிதையை....

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, July 22, 2010

சிறகுகள் இல்லாமல் பறக்கிறேன்

பெண்ணே!....
சிறகுகள் இல்லாமல்
பறக்கிறேன்

நீ எனை பார்க்கும்
தருணத்திலே
.......
கால்கள் இல்லாமல்
நடக்கிறேன்
உன் நினைவு
பாதையிலே
.........
கைகள் இல்லாமல்
அணைக்கிறேன்

நான் கண் உறங்கும்
நேரத்திலே
.....
உயிர் இல்லாமல்
அலைகிறேன்

நீ எனை வெறுக்கும்
பொழுதினிலே
......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, July 21, 2010

தோழி - காதலி


தோழி எதையும் எதிர்பாராமல்
காதலி அன்பை எதிர்பார்த்து......
தோழி என் காதலுக்காக
என் பெற்றோரிடம் பேசுவாள்..
காதலி
என் காதலுக்காக
அவள்
பெற்றோரிடம் நான் பேசுவேன்...
தோழி காதலி வருவதை பார்த்தாள்
சற்று தள்ளி அமருவாள்.... தன்
இடைவெளியை வெளிப்படுத்த..
காதலி தோழி வருவதை பார்த்தாள்
சற்று நெருக்கமாக அமருவாள்... தன்
நெருக்கத்தை வெளிப்படுத்த........
தோழி கண்ணீரை துடைப்பாள்....
காதலி கண்ணீரை தருபவள்...
தோழி எனக்காக உயிரை கொடுப்பாள்..
காதலி தனக்காக வாழ உயிரை எடுப்பாள்....


...........................................தோழி - காதலி தொடரும்...................................

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

உன் அழகில் மயங்கி

தோழியே!....
என்
காதலை சொல்லி
அனுப்பிய ரோஜா கூட
என்னை போலவே
உன் அழகில் மயங்கி
ஊமையாகி உன்
தலையில்........

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, July 20, 2010

ஏங்கி தவிக்கும் மரண தண்டனை

தேவதையே!......
அன்று இரவு
நீ ஏற்றிய
மெழுகுவர்த்தியில்
உன் அழகு முகம் பார்த்தேன்
என் இதயத்தின்
வெளிப்பாடாய்
அந்த மெழுகுவர்த்தி......
எப்படி சொல்ல
மெழுகுவர்த்தியிடம்
இன்று ஒரு நாள்
மட்டுமே உனக்கு
மரண தண்டனை ........
தினம் தினம் பார்க்கும்
எனக்கு எத்தனை மரண தண்டனை
என்று எண்ணிப்பார்.....
இந்த மரண தண்டனையும்
என் மனம் ஏங்கி தவிக்கும் தண்டனைதான்....

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, July 19, 2010

தென்றல்...

அன்று அழகான
மாலை நேரம்
தென்றல் உன்
கூந்தலை தொட்டுபார்க்க
எண்ணிய அந்த நொடி
எங்கிருந்தோ வந்த சிறிய
தூசி உன் கண்களை கலங்கடிக்க
செய்வதரியாது திணறிய தென்றல்...
மேகத்தை அழைத்து... தன்
துயரத்தை வெளிப்படுத்தியது
கண்ணீராக!...
உன் மேல்
மழைத்துளி...

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, July 18, 2010

விழி ஈர்ப்பு விசை

சகியே...
நல்ல வேலை
அன்றே பிறந்துவிட்டான்..
ஐசக் நியூட்டன்....
இந்த யுகம் பிறந்து
உன் கண்களை
சந்தித்து இருந்தால்
விழி ஈர்ப்பு விசை அல்லவா
எழுதி இருப்பான் ....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

சுவாசிக்கிறேன்...

பெண்ணே!..
கருவறையில்

என் தாயின்
சுவாசக்காற்றை
சுவாசித்தேன்...
இப்போது
உன்
சுவாசம் கலந்திருக்கும்
என்பதால் சுவாசிக்கிறேன்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Saturday, July 17, 2010

என் கவிதை பிடிக்கவில்லை

அழகியே!..
ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதை எனக்கு பிடிக்கவில்லை...
உன் அழகு
ஒவ்வொரு நாளும்
அதிகரிக்கும்பொழுதும்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இஷ்ட தெய்வம்

தேவதையே
நீ
கோவிலை
சுற்றி வருகிறாய்
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்
இருவருமே
இஷ்ட தெய்வத்தையே
சுற்றி வருகிறோம்.....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Friday, July 16, 2010

கல் கூட பொக்கிஷமாக

தோழியே
நீ என் மேல்
எரிந்து விளையாண்ட
கல் கூட - என்

அறையில்
பொக்கிசமாக!...
நீ கொடுத்த மிட்டாய்
பேப்பர் கூட - என்
அறை சுவர்கள் முழுவதும்
அழங்கரிப்பனாக!......
நீ கொடுத்த ஒவ்வொன்றும்
என் அறையில் நினைவு சின்னமாக!...
ஒரு நாள் - உன்
பெற்றோருடன் என்
அறைக்கு வருகை தந்தாய்....
என் தலையை கலைத்துவிட்டு
இவன் எப்போதுமே
இப்படி தான் அறையை
குப்பையாக வைத்திருப்பான் - என்றாய்
இதெல்லாம் நீ கொடுத்தது என்று
தெரியாமல்....
அன்று போல இப்போதும்
நான் உன்னை காதலிப்பது தெரியாமல்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, July 15, 2010

கண்ணீர் துளிகள்.......

தோழியே!
உன்னிடம் ஏதேதோ
பேசிய நான்....
ஆயிரம் முறை
ஒத்திகை பார்த்த
என்
காதலை வெளிபடுத்த
முடியாமல் ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளிகளாய்
தொடர்கின்றன - என்
கண்ணீர் துளிகள்.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, July 14, 2010

எனை அறியா மாற்றம் ஏன் தோழி?.......

தோழியே!...
நீ இயல்பாக
சொல்லிவிட்டாய்
நாளை அதிகாலை
சந்திக்கலாம் என்று...
எனை எழுப்ப ஆயிரம்
முறை ஒத்திகை பார்த்த
கடிகாரம்....
நூறு முறை அதிகாலை
எழுப்ப சொன்ன நண்பன்....
கடைசியில் இவைகளை
எழுப்பியது நான்...
எனை அறியா மாற்றம்
ஏன் தோழி?.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

காதல் பாலம்

பிரியமானவளே!....
உன்
வருகைக்காக
வானம் வரைந்த
காதல் பாலம் தான்
அழகான
வானவில்...

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கல்லூரி நட்பு

காலையில் தூறும்
பனித்துளிகளாய் நாம்
கல்லூரிக்கு வந்தோம்...
காலம் என்னும்
கதிரவன் பட்டு
கண் பார்வையில்
மறைந்தாலும் - நம்
கல்லூரி நட்பு என்றும்
மறையாது.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, July 13, 2010

முதல் உலக அதிசயம் நீ...

பெண்ணே!...
நான்
பார்த்து ரசித்த
முதல் உலக
அதிசயம் நீ...
உன்னைக் கண்டால்
அந்த
உலக அதிசயங்களும்
உன் மேல் காதல்
கொள்ளும்......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, July 12, 2010

பாத சுவடு

தோழியே...
ஆயிரம் பேர்
கடந்து சென்ற
கடற்க்கரை மணலில்..
கண்டறிவேன் - உன்
அழகிய பாத சுவடை
நீ....
கடந்து சென்றது
என் இதய சுவடல்லவா?...

............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

நகல் நிழலாக..

பெண்ணே!
உன்னை நகல்
எடுப்பதற்காக
தினம் தினம்
வந்து போகிறது
சூரியன் ...
நகல் நிழலாக..

............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

Sunday, July 11, 2010

வெட்கம்

பெண்ணே!
தென்றல் உன்
கூந்தல் அசைவில்
நடனம் கற்க்கிறது....

உன் கூந்தலிள்ளிருந்து
ரோஜா விழுந்ததன் காரணம்?
தன் அரசியின் கூந்தலில்
இருந்த வெட்கத்தில?.....


............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

Friday, July 9, 2010

ஆயுள் ரேகை

தோழியே!...
என் கை பிடித்து
ஒரு நாள் விளையாட்டாய்
என் ஆயுள் ரேகை
அழுத்தமாய் உள்ளது என்றாய்.
நீதான் என் ஆயுள் - என்பது
அறியாமல்...

............. ப்ரியமுடன்
~பிரகதீஸ்

காலடி சுவடு

பெண்ணே !
நீ பங்கேற்ற
கோலப்போட்டியில் நான் நடுவனாக....
நீ வரைந்த கோலத்திற்கு...
முதலிடம் கொடுக்கவில்லை... நான்....
அதன் அருகில் நீ......
பதித்து இருந்த உன்
காலடி சுவடுக்கு கொடுக்கப்பட்டது....

........ப்ரியமுடன்
~பிரகதீஸ்

நீயும் ஒரு அன்னப் பறவை

நீயும் ஒரு அன்னப் பறவை
நம்பவில்லையடி!...
நீரில் கலந்த பாலை மட்டும் குடிக்கும்
அன்னப் பறவை ஒன்று உள்ளதென்று....
நம்பினேன்.....
உடலை விட்டு உயிரை மட்டும் குடிக்கும்....
உன் கண்களை சந்தித்த பிறகு!....


................ப்ரியமுடன்
-பிரகதீஸ்

எட்டாவது உலக அதிசயம்

உன் காலடி சுவடு கூட
எனக்கு எட்டாவது உலக
அதிசயமடி...
................ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, July 8, 2010

முகப்பரு

ஏ பெண்ணே ...
உனக்கு அவமானமாக தோன்றும் ...
உன் முகபரு - எனக்கோ!...
ரோஜாவின் மேல் உள்ள பனித்துளி
ஒவ்வொன்றும்..
ரோஜாவிற்கு அழகுதான்....

................ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, July 6, 2010

உலக அதிசய அழிவு

இனியவளே..
நீ ஒவ்வொரு முறையும்
நகத்தை வெட்டும் பொழுதும்
உலக அதிசயங்களில்
ஒன்றை அழிப்பதாகத்தான்
நான் நினைக்கிறேன்....

.......ப்ரியமுடன்
. பிரகதீஸ்

Sunday, July 4, 2010

மன்னிப்பு

பெண்ணே!..
நீ கடற்கரையில்
நடந்து செல்கயில்
உன் பாதங்கள் உருவக்கிய
உலக அதிசயத்தை!.....
கடல்....
தொட நினைத்து அதை
அழித்ததை எண்ணி
உன் காலடியில்
மன்னிப்பு கேட்பது
தெரியவில்லையா அலைகளாக.........

........... ப்ரியமுடன்
~பிரகதீஸ்

Wednesday, June 9, 2010

உயிரை குடிக்கும் எழுத்துக்கள்

பெண்ணே!
எழுத்துகளில்
உயிர் எழுத்துக்கள்
உள்ளன அறிவேன்....
உன் பெயர் தெரிந்த பிறகு....
உயிரை குடிக்கும் எழுத்துக்களும்
உள்ளன என்பதை அறிந்தேன்...

..ப்ரியமுடன்
~பிரகதீஸ்

Sunday, May 9, 2010

உயிரை விட போட்டி

இனியவளே..
நீ சூடிக்கொள்வாயேயானால்
இந்த பூக்களுக்குதான் எத்தனை
போட்டி தன் உயிரை
மாய்த்துக்கொள்ள
நீ சூடாத பூக்கள்...
கண்ணீர் விடுகிறது தேனீராக....
அந்த கண்ணீரையும் உண்டு வாழ்கிறது
வண்ணத்துபூச்சிகள்...
.
....ப்ரியமுடன்
~பிரகதீஸ்