Monday, June 6, 2011

வான வில்லும் வற்றியதே

தேவதையே!....
கடலின் நீலம்
கறைந்ததே
கண்ணே உனை
கவி வடிக்க!.........
வான வில்லும்
வற்றியதே
பெண்ணே
உனை வடிக்க!.......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, February 21, 2011

நீ என் காதலின் விடை

பேதையே!...
நீ
காதல் விதையாய்
விழுந்திருந்தால்
விட்டிருப்பேன் என் காதலை......
நீ
என் காதல் விடையாய்
வந்து விழுந்ததினால்
இனிமேல்
விட்டிடுவேன் எனதுயிரை.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, January 13, 2011

உழவன்

உழவன்!.....
நேற்று!.....
கணக்கு பார்த்தான்
உலக்கு அரிசி மிஞ்சவில்லை...
இன்று!...
கணக்கு பார்க்கிறான்
உடுத்திய உடை கூட
மிச்சமில்லை....
நாளை!....
கணக்கு பார்க்க
அவன் உயிர் கூட மிச்சமிருக்காது......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, January 11, 2011

என் உயிரும் உறையுதே

பாதகத்தியே!........
நீ
என் இரு கை
பிடிக்கையிலே
இறகு முளைக்குதே!.......
கொஞ்சம்
இறுக்கி பிடிக்கையிலே
இதயம் உடையுதே!........
உனை
பார்க்கும் தருணம்
என்
உயிரும் உறையுதே!.......
எனை கடந்தபொழுது
உறைந்த உயிரும் உதிருதே!.....
நீ
திரும்பி பார்த்த நொடியினிலே
திரும்பம் பெற்றேன்
எனதுயிரை!.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, December 20, 2010

பூக்களை உண்ணும் வண்டுகள்..

பூக்களில்...
தேனை உறிஞ்சும்
வண்டுகள்..
பூக்களை சேர்த்து
உறிஞ்சுமா?.... என்ன...
பின்பு ஏன்!.....
உன்
பார்வை மட்டும்
என்
காதலோடு
என்னையும் சேர்த்து
உறிஞ்சிக்கொள்கிறது......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்




Monday, December 6, 2010

கண் மை

பெண்ணே!....
நீ...
கண் மை
இடும் பொழுதுதான்
கறுமையும்
கொஞ்சம்
கர்வம் கொள்கிறது..........

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, December 5, 2010

பூமி காதல்

உன் மேல் விழுந்து
உதிரும்
மழை துளி
பூமியில் பட்டதும்
பூமி கொஞ்சம்
கரைந்து தான்
போகிறது காதலில்...
என்னை போல!.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்