மானசீகமானவளே!..........
சில நேரம்
வேண்டும் என்றே
என்னை
அருகில் பார்க்க
உன் தோழிகளோடு
என்னை கடந்து செல்கிறாய்........
என்னருகில்
நீ வரும் ஒவ்வொரு
நிமிடமும்
என் சுவாசம் வழி
இதயம் இறங்கி
என் இதயத் துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பாகிறது..................
இரட்டிப்பின் அர்த்தம்
இப்போது தான்
புரிகிறது
எனை பார்க்கும் தருணம்
நீ சுவாசிக்க மறந்து................
என்னுள் நீ
இரண்டறக் கலந்து
உனக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதால்
இதய துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பானது...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Very Nice
ReplyDeleteஎன் கவிதையை படித்து பாராட்டியமைக்கு நன்றிகள் பல செந்தில் அண்ணா..........
ReplyDelete